சென்னையில் இன்று முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை


சென்னையில் இன்று முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை
x
தினத்தந்தி 10 Sept 2020 9:57 AM IST (Updated: 10 Sept 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, 5 மாதத்திற்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கத் தொடங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை பரங்கிமலை-சென்ட்ரல், விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை போன்ற வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மக்கள் முக கவசம், சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் சென்ட்ரல்-கோயம்பேடு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. மேலும் இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story