திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ


திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 10 Sept 2020 8:29 PM IST (Updated: 10 Sept 2020 8:29 PM IST)
t-max-icont-min-icon

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தற்பொழுது அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை. திரையங்குகளில் மக்கள் 3 மணி நேரம் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

கொரோனா பாதிப்பு சூழலை ஆராய்ந்து, கண்காணித்து திரையரங்குகளை திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும். திரையரங்குகளை திறப்பு குறித்து முடிவு செய்யப்படாத நிலையில் மற்ற நடவடிக்கைகள் பற்றி பேசுவது சரியாக இருக்காது.

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story