தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு


தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 11 Sept 2020 2:46 PM IST (Updated: 11 Sept 2020 2:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவல் குறையும் வரை தேர்வை ஒத்திவைக்குமாறு அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story