இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பதிவேற்றம் செய்ய வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் வருகிற 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆன்லைன் வழியாக தேர்வை நடத்த இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது இறுதி செமஸ்டர் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் தங்களுடைய செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பதிவேற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாணவர்கள் தங்களுக்கு என்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ‘லாகின் ஐ.டி.’ மூலம் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பதிவு செய்யப்படும் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, இறுதி செமஸ்டர் தேர்வு தொடர்பான தகவல்களை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story