சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம் - உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.
இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதியன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, ஜூலை 19, 2017 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். மேலும் செப்டம்பர் 14 அன்று திமுக எம்எல்ஏக்கள் இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக எம்.எல்.ஏக்களை நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுக்கவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே இந்த புது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story