செப்டம்பர் 12 : சென்னையில் கொரோனாவில் தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள்
சென்னையில் கொரோனாவில் தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியல் வெளியானது.
சென்னை:
கொரோனா தொற்று உள்ளவர்களில் 9500 பேர் குணமானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்து 33,969, செப்டம்பர் 10ம் தேதி 4 லட்சத்து 86,052 ஆக உயர்ந்துள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 10 நாட்களில் சராசரியாக 5600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவில் தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 12) வெளியிடப்பட்ட பட்டியல்
மண்டலம் | குணமானவர்கள் | இறப்பு | பாதிப்பு |
திருவொற்றியூர் | 4,268 | 132 | 268 |
மணலி | 2,119 | 31 | 140 |
மாதவரம் | 4,774 | 72 | 395 |
தண்டையார்பேட்டை | 11,377 | 281 | 619 |
ராயபுரம் | 13,135 | 297 | 861 |
திருவிக நகர் | 10,107 | 296 | 761 |
அம்பத்தூர் | 9,295 | 167 | 826 |
அண்ணா நகர் | 15,093 | 332 | 1,084 |
தேனாம்பேட்டை | 12,826 | 396 | 872 |
கோடம்பாக்கம் | 15,048 | 312 | 1,171 |
வளசரவாக்கம் | 8,366 | 151 | 931 |
ஆலந்தூர் | 4,963 | 88 | 529 |
அடையாறு | 10,264 | 204 | 829 |
பெருங்குடி | 4,347 | 76 | 508 |
சோழிங்கநல்லூர் | 3,714 | 35 | 393 |
இதர மாவட்டம் | 3,076 | 72 | 692 |
மொத்தம் | 1,32,772 | 2,942 | 10,879 |
Related Tags :
Next Story