நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகிறது - எச்.ராஜா கருத்து


நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகிறது - எச்.ராஜா கருத்து
x
தினத்தந்தி 12 Sept 2020 5:45 PM IST (Updated: 12 Sept 2020 5:45 PM IST)
t-max-icont-min-icon

நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகிறது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கிசான் திட்ட முறைகேட்டில் மத்திய அரசின் தவறு ஏதுமில்லை. பாஜக - அதிமுக கூட்டணியில் பிரச்சினை இல்லை. 2021 தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். கூட்டணி பற்றி புரிதல் இல்லாததால் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்ற அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கொரோனா தடுப்புப் பணிகளில் அரசின் செயல்பாடுகளை ஸ்டாலின் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது.  நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story