மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் காலமானார்


மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 12 Sept 2020 6:10 PM IST (Updated: 12 Sept 2020 6:10 PM IST)
t-max-icont-min-icon

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.


சென்னை,

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் நுரையீரல் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை எழுதியவர். சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி சாந்தி 2006-ஆம் ஆண்டு காலமானார்.


Next Story