நீட் தேர்வுக்கே இரங்கல் சொல்லும் நேரம் இது - தி.மு.க எம்.பி தயாநிதிமாறன்


நீட் தேர்வுக்கே இரங்கல் சொல்லும் நேரம் இது - தி.மு.க எம்.பி தயாநிதிமாறன்
x
தினத்தந்தி 12 Sept 2020 6:41 PM IST (Updated: 12 Sept 2020 6:41 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தில் நலதிட்ட உதவிகளை வழங்கிய பின் தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கூறியதாவது:-

நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது. தங்களை தயார் செய்துகொள்ள முடியாது. இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது.

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள கிராமத்தில் மருத்துவ கனவுகளுடன் யார்யார் இருக்கிறார்களோ அவர்கள் பயிற்சி பெற வேண்டும். கொரோனாவால் அனைத்தும் முடங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை செய்தே தீரவேண்டும் என்று குறிப்பாக தமிழ்நாட்டை பாதிக்கின்ற வகையிலே செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசு வெறும் இரங்கல் மட்டும் சொல்கிறார்கள். உயிர்களை இழந்தது போதும், அவர்களுக்கு இரங்கல் சொல்வதை விட நீட்டுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story