2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை: அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை: அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி
x
தினத்தந்தி 12 Sept 2020 9:56 PM IST (Updated: 12 Sept 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் செய்முறைத் தேர்வுகள் வரும் 22-ம் தேதி, எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடைபெறும். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story