நீட் தேர்வு அச்சத்தால் 3- வதாக ஒரு மாணவர் தற்கொலை


நீட் தேர்வு அச்சத்தால் 3- வதாக ஒரு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2020 10:47 PM IST (Updated: 12 Sept 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு,

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இன்று அதிகாலை மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா  நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்தது. 

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story