தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2020 4:08 AM IST (Updated: 13 Sept 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை, 

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘தேவாலா 6 செ.மீ., அவலாஞ்சி 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., மேல்பவானி, சோலையாறு, சின்னக்கல்லாறு, கிளன்மோர்கன் தலா 3 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழைபெய்துள்ளது.


Next Story