பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: திருச்சியில் 8,650 போலி வங்கிக் கணக்குகள் முடக்கம்


பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: திருச்சியில் 8,650 போலி வங்கிக் கணக்குகள் முடக்கம்
x
தினத்தந்தி 13 Sept 2020 12:39 PM IST (Updated: 13 Sept 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பயனாளிகளாக சேர்க்கப்பட்ட 8,650 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

திருச்சி,

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஊக்க நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்டதப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலர் போலி வங்கிக் கணக்குகள் மூலம் பயன்பெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் தொடர்புடைய மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 15 ஆயிரம் பேர் புதிதாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகளின் உண்மைத்தன்மை குறித்து வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 8,650 பேர் முறைகேடாக இத்திட்டத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.4.30 கோடியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story