நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல்


நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல்
x
தினத்தந்தி 13 Sept 2020 3:16 PM IST (Updated: 13 Sept 2020 3:16 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த ஆதித்யா மற்றும் மோதிலால் குடும்பத்தினருக்கு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “தருமபுரி மாணவர் செல்வன்.ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மாணவர் செல்வன்.மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற துயரச் செய்திகள் எனது வேதனையையும் மன வலியையும் அதிகரிக்கின்றன. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு; மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட மாண்புமிகு அம்மாவின்அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தயைகூர்ந்து தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story