சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
x
தினத்தந்தி 13 Sep 2020 4:26 PM GMT (Updated: 13 Sep 2020 4:26 PM GMT)

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

சென்னை,

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னையின் முக்கிய பகுதிகளான அசோக்நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராமாபுரம், கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பாக வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல்,பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Next Story