மாநில செய்திகள்

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது + "||" + In the last one week Corona damage in Chennai 0.8 percent lower

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்துள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, 

சென்னையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 

அந்த வகையில் மணலி மண்டலத்தில் 8 சதவீதமும், பெருங்குடி மண்டலத்தில் 4.1 சதவீதமும், அண்ணாநகர் மண்டலத்தில் 2.9 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், ராயபுரம் மண்டலத்தில் 0.9 சதவீதமும் குறைந்துள்ளது.

அம்பத்தூர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் தலா 0.6 சதவீதமும், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் தலா 0.5 சதவீதமும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 0.8 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் அடையாறு மண்டலத்தில் 0.3 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.5 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1.5 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.9 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. நிவர் புயலால் தொடர் மழை எதிரொலி: சென்னையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
நிவர் புயலால் தொடர் மழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.
3. நிவர் புயலின் தாக்கம்; சென்னையில் 44 இடங்களில் தண்ணீர் தேங்கியது
நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் 44 இடங்களில் தண்ணீர் தேங்கியது.
4. சென்னையில் நிவர் புயல் : 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு - முழுப் பட்டியல்
சென்னையில் நிவர் புயல் காரண்மாக 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது அதன் முழுப் பட்டியல் வருமாறு:-
5. நிவர் புயல்: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை
சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.