தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது
தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் மானிய கோரிக்கை விவாதத்துடன் முடிவடைந்தது. அப்போதே, கொரோனா பாதிப்பு தொடங்கியதால், அந்த கூட்டத்தொடர் வேகமாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்டின் 2-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் ப.தனபாலும் அங்கு சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது.
Related Tags :
Next Story