மாநில செய்திகள்

பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார் + "||" + New Railway Bridge at Pamban - Railway Minister Piyush Goyal released the video

பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார்

பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார்
பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி, 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் இடையே தற்போது உள்ள ரயில் பாலத்திற்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக கடலின் நடுவே தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் புதிதாக அமையவுள்ள தூக்குப் பாலம் குறித்த அனிமேசன் வீடியோவை மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.