கோவை கட்டிட தொழிலாளி சித்ரவதை? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
கொலை வழக்கை ஒத்துக்கொள்ளும்படி கோவை கட்டிட தொழிலாளி சித்ரவதை? செய்ததாக புகார் எழுந்ததையடுத்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்னை,
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர், கோவை கவுண்டம்பாளையத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர், 6 மாதத்துக்கு முன்பு கோவனூர் அருகே நடந்த கொலையை, தான் செய்ததாக ஒத்துக்கொள்ளும்படி கூறி கண்ணனை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.
பின்னர், இதுதொடர்பாக கோவை போலீஸ் சூப்பிரண்டு 3 வாரத்துக்குள் தனது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story