தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே - ப.சிதம்பரம் கருத்து
தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று (நேற்று) இந்தி தினம் என்று இந்தி மொழி பேசும் மக்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே.
கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்கு பெருமையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story