கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜர்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 15 Sep 2020 11:30 PM GMT (Updated: 15 Sep 2020 9:49 PM GMT)

கோடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்பட 7 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ்சாமி கோர்ட்டில் சரணடைந்தார்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

இது தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோவை மத்திய சிறையில் இருந்து சயான், மனோஜ், பொள்ளாச்சி சிறையில் இருந்து மனோஜ்சாமி, உதயகுமார், ஜித்தின்ராய், பிஜின் ஆகிய 6 பேரை போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமினில் உள்ள சம்சீர் அலி ஆஜரானார்.

இந்த நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தனிப்படை போலீசார் தேடி வந்த சந்தோஷ்சாமி நேற்று ஊட்டி கோர்ட்டில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.சந்தோஷ்சாமி சரண் அடைந்ததால் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. தலைமறைவாக சதீசன், திபு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story