மாநில செய்திகள்

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு + "||" + Anna University Exam Schedule Publication

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு
அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, 

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் அனைத்தும் ஒருமணி நேரம் நடைபெறும்.காலை 10 மணி முதல் 11 மணி, 12 மணி முதல் 1 மணி, 2 மணி முதல் 3 மணி மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை என நான்கு வேளைகளாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் கேட்கப்படும் 40 கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. இந்த கேள்விகள் அனைத்தும் பல விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கேட்கப்பட்டிருக்கும்.

மேலும் பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை படித்தால் போதுமானது என அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதி பருவத் தேர்வுகளுக்கு முன் மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 19 மற்றும் 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பி.இ உறுப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  

முன்னதாக அண்ணாபல்கலைகழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனில் இறுதி தேர்வு நடத்தி கொள்ள அனுமதிளித்து அரசாணை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.