அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு தாக்கல்


அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு தாக்கல்
x
தினத்தந்தி 16 Sept 2020 2:47 PM IST (Updated: 16 Sept 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க சட்டப்பேரவையில் இன்று சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மசோதாவின்படி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும் அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story