அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்


அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்
x
தினத்தந்தி 16 Sept 2020 9:00 PM IST (Updated: 16 Sept 2020 9:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை

அதிமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க மாநில தலைவர் பதவியில் உள்ளார்.

இந்நிலையில் செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து இன்று மாலை 7 மணிக்கு கே.ஏ.கே.செல்வம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழக ஆளும் கட்சியான அதிமுக அரசின் மூத்த அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் மகன் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story