கொரோனா காலத்தில் முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா காலத்தில் முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 17 Sept 2020 11:08 AM IST (Updated: 17 Sept 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

கொரோனா காலகட்டத்திலும் முழுமையாக கல்வி கட்டணத்தை வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் தீவிரம், பெற்றோர் மாணவர்களின் மனநிலை ஆகியவை அறிந்துஅதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை அணிவகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Next Story