தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
வட கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 20-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story