ரேஷன் கடைகளுக்கு 3-வது வார சனிக்கிழமை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


ரேஷன் கடைகளுக்கு 3-வது வார சனிக்கிழமை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 12:20 AM IST (Updated: 18 Sept 2020 12:20 AM IST)
t-max-icont-min-icon

இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு 3-வது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர்.

எனவே விடுமுறை நாளிலும் ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக இந்த மாதம் 19-ந்தேதி, வரும் அக்டோபர் 17-ந்தேதி, நவம்பர் 21-ந்தேதி ஆகிய நாட்கள் (மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story