தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் நிகர இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு சட்டசபை ஆய்வறிக்கையில் தகவல்


தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் நிகர இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு சட்டசபை ஆய்வறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2020 4:15 AM IST (Updated: 18 Sept 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் நிகர இழப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் நிகர இழப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 16-ந் தேதியன்று மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய 2017-18-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனின் முன்னுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கல், போக்குவரத்து, மின்சாரம், வீட்டு வசதி, பொது வினியோகம் போன்ற அடிப்படை வசதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த ஆய்வறிக்கையில் 55 பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் 8 வாரியங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 55 பொதுத்துறை நிறுவனங்களின் 2016-17-ம் ஆண்டின் மொத்த விற்றுமுதல் 1 லட்சத்து 8 ஆயிரத்து 10 கோடி ரூபாயாக இருந்தது. மறு ஆண்டில் இதில் முன்னேற்றம் ஏற்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 460 கோடியாக இருந்தது.

இந்த பொதுத்துறை நிறுவனங்களில் 32 நிறுவனங்கள், ஒட்டுமொத்த லாபமாக ரூ.569.32 கோடியை ஈட்டியுள்ளன. ஆனால் 23 நிறுவனங்கள் ரூ.17 ஆயிரத்து 992 கோடியே 88 லட்சம் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2016-17-ம் ஆண்டில் ரூ.3,837 கோடியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இயக்க லாபம், 2017-18-ம் ஆண்டில் ரூ.1,116.28 கோடி நஷ்டமாக மாறியது. 2016-17-ம் ஆண்டில் ரூ.5,670.36 கோடியாக இருந்த ஒட்டுமொத்த ரொக்க நஷ்டம், 2017-18-ம் ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 43 கோடி ரொக்க இழப்பாக உயர்ந்தது.

2016-17-ம் ஆண்டில் 20 நிறுவனங்களும், 2017-18-ம் ஆண்டில் 23 நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்தன. 2017-18-ம் ஆண்டில் லாபம் ஈட்டிய 32 நிறுவனங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கிடங்கு நிறுவனம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் நிகர இழப்பு, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் 2014-15-ம் ஆண்டில் ரூ.2,337 கோடி என்ற அளவில் இருந்த நிகர இழப்பு, அடுத்தடுத்த 3 ஆண்டுகளில் முறையே ரூ.2,602.48 கோடி, ரூ.3,032.67, ரூ.5,503.37 என்று உயர்ந்த வண்ணம் இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story