துரோக வரலாற்றை சரித்திரம் என்றும் மறக்காது 13 மாணவர்கள் மரணத்திற்கு அ.தி.மு.க. அரசே காரணம் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 மாணவர்கள் மரணத்திற்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்றும், அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றை சரித்திரம் என்றும் மறக்காது; மறைக்கவும் செய்யாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
‘நீட்’ தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க. தரப்புக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வரும் நிலையில், ‘நீட்’ தேர்வு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
பேரவை விதிகளை முறையாகப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, முதல்-அமைச்சர் ஒரு பொய் ஆவேசத்தை, வேடம் போட்டுக்கொண்டு விரல் ‘நீட்’டிக் காட்டி விட்டால் ‘நீட்’ தேர்வில் அ.தி.மு.க. அரசின் வரலாற்றுப் பிழையை வரலாறு காணாத துரோகத்தை திரை போட்டு மறைத்து விடலாம்; தன் துரோகம் மறைந்து விடும் என்று நினைத்து, பகல் கனவு காண்கிறார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ‘நீட்’ தேர்வில் நடத்தியுள்ள கபட நாடகங்கள் “இல்லை. துரோகம் செய்தது அ.தி.மு.க.” என்று அணி வகுத்து நிற்கின்றன. இதோ ஆதாரங்கள்.
கேள்வி: 2010 ‘நீட்’ கொண்டு வந்ததற்கு யார் காரணம்? மத்தியில் அப்போது யார் ஆட்சி இருந்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க.,வும் அங்கம் வகித்தது.
பதில்: முதலில் 2010-ல் ‘நீட்’ தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. இங்கு தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் முதல்-அமைச்சர் கருணாநிதி உடனடியாக ஐகோர்ட்டை நாடி வழக்குத் தொடுத்து ‘நீட்’ தேர்வைக் கொண்டு வரும் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு தடையுத்தரவு வாங்கினார். தி.மு.க. ஆட்சி இருந்தவரை 2011-ம் ஆண்டுவரை ‘நீட்’ தேர்வு செயல் வடிவத்திற்கும் வரவில்லை. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தி.மு.க. ஆட்சியில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது என்று ஒரு ஆதாரத்தை வெளியிடட்டும். ஆகவே தி.மு.க. ஆட்சியில் ‘நீட்’ கொண்டு வரப்படவில்லை.
2014-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அன்றிலிருந்து திரைமறைவிலும் பொதுவெளியிலும் அ.தி.மு.க. ஆதரவு அளித்து வந்தது; பிறகு கூட்டணியாகவே மாறியது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்து அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விசாரணையே இல்லாமல் தீர்ப்பளித்த வழக்கில், ‘நீட்’ வேண்டும் என்று மைனாரிட்டியாக மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு 11.4.2016 அன்று திரும்பப் பெற்றது. அப்போது மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க.வோ, அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ இந்தத் தீர்ப்பு திரும்பப் பெறப்படும் போது, அதற்கு எதிராக வாயே திறக்கவில்லை. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் வாதிடவில்லை.
தி.மு.க. அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுச் சட்டமாகி விட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆகவே இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குப் பொருந்தாது என்று கூறிடக் கூட முதுகெலும்பு இல்லை. அப்படி பா.ஜ.க.விற்கு உள்நோக்கத்துடன் ஒத்துழைப்பு கொடுத்ததன் விளைவாகவே 2016-ல் ‘நீட்’ மீண்டும் வந்தது.
ஆகவே ‘நீட்’ தேர்வு செல்லாது என்ற தீர்ப்பு ரத்தானதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதற்கான அவசரச் சட்டம் பா.ஜ.க. அரசால் 24.5.2016 அன்று பிறப்பிக்கப்பட்டது. 2016-ல் நாங்கள் மாநிலத்தில் ஆட்சி செய்யவில்லை என்றோ, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இல்லை என்றோ எங்களுக்குள் ரகசிய உறவு கூட்டணி இல்லை என்றோ எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா?. ‘நீட்’ தேர்வை ரத்து செய்த தீர்ப்பு 2013-ல் வந்தது. அப்போது தி.மு.க. தொடுத்த வழக்கில்தான் அந்தத் தீர்ப்பு வெளிவந்ததே தவிர அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கால் அல்ல என்பதே உண்மை.
கேள்வி: ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வர யார் காரணம்? நீங்கள் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சிதான்.
பதில்: பச்சைப் பொய்! ‘நீட்’ தேர்வு மீண்டும் வரக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி; மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி; 2017-2018-ல் தான் முதன்முதலில் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை 13 தற்கொலைகள். இந்த தற்கொலைகள் அனைத்தும் பா.ஜ.க அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுள்ளன. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும்தான் இந்த ‘நீட்’ தேர்வுக்கு காரணம்; தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளுக்கும் காரணம். கை ‘நீட்’டிப் பேசி, கைக்குள் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்திட முடியாது.
ஆகவே இன்று வரை மாணவர்களை ஏமாற்றி ‘நீட்’ தேர்வை ரத்து செய்யாமல் விலக்கும் பெறாமல், 13 மாணவர்கள் தற்கொலைக்கு அப்பட்டமான காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியே இந்தத் துரோக வரலாற்றை சரித்திரம் என்றும் மறக்காது; மறைக்கவும் செய்யாது நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
கேள்வி: ‘நீட்’ தேர்வை எப்படி ரத்து செய்வார் மு.க.ஸ்டாலின்?
பதில்: அலுவல் மொழியாகத் தமிழும் ஆங்கிலமும் தொடரும் என்று தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததைப் போலவும்; நுழைவுத் தேர்வை ரத்து செய்து அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெற்று அந்தச் சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு பெற்றது போலவும்; முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, தி.மு.க.வும் ஒரு மனதாக, நிறைவேற்றி அனுப்பிய ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது போலவும்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று; நிச்சயம் ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. எப்போதும் சொன்னதைச் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும் என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பொய்களைச் சொல்லியே பொழுது போக்கலாம்; ஊழல்களைச் செய்து கொண்டே ஊரை ஏமாற்றலாம்; என்ற தந்திரத்தோடு, நீங்கள் போடும் வேடம் கலையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story