விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு


விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 3:38 AM (Updated: 18 Sept 2020 3:38 AM)
t-max-icont-min-icon

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ள்ளார்.

சென்னை,

திமுக பொதுச்செயலாளராக மூத்த நிர்வாகியான துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பொருளாளராக டி.ஆர்.பாலுவும், திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடியும், ஆ. ராசாவும் தேர்வாகினர். இதை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

Next Story