காவல் ஆய்வாளர் மீது நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கு பதிவு


காவல் ஆய்வாளர் மீது நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கு பதிவு
x
தினத்தந்தி 18 Sept 2020 9:41 AM IST (Updated: 18 Sept 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  செல்வன் என்பவரை அடித்து திசையன்விளை பகுதியில் வீசி சென்றதால்  நெல்லை மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். 


Next Story