கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியீடு
பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்
சென்னை,
பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாயாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது தெரியவந்தது.
இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தொலைபேசி - 044 2851 3500, தொலை நகல் - 044 2851 2510, வாட்ஸ் அப் - 94981 81035 மின்னஞ்சல் - cbcid2020@gmail.com ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story