தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல என்றும் கூறினார். மேலும் பொது சுகாதாரத் துறையின் சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை குறித்த விவரங்கள் ஐ.சி.எம்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதத்தால் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது என்றும் இதில் எந்த குளறுபடியும் இல்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story