தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x

தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதலமைச்சர் பழனிசாமி 21ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story