தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் 180 கேள்விகளில் 176 கேள்விகள் தமிழக அரசு நடத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு உள்ளது. 12 தொலைக்காட்சிகளில் தமிழக பாடத்திட்டங்களின் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. கல்வி சேனல் மூலமாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க 6 மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததும் முதல்-அமைச்சருடன் கலந்து பேசப்படும். பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story