‘கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடியுங்கள்’ பிரதமர் மோடியின் பிறந்தநாள் செய்தி
பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்காக அவர் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். இந்த வாழ்த்துதான் நாட்டுக்காக உழைக்கும் வலிமையை தருவதாகவும் கூறியிருந்தார்.
தனது பிறந்தநாளையொட்டி நேற்று அவர் நாட்டு மக்களுக்கு சிறப்பு செய்தி ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதாவது கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த பலரும், இந்த நாளில் என்ன விரும்புகிறீர்கள்? என என்னிடம் கேட்டனர். நான் என்ன கேட்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன்: அதாவது கொரோனாவை கட்டுப்படுத்த முககவசம் அணியுங்கள். அதை சரியாக அணியுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். நினைவிருக்கட்டும் 2 மீட்டர் இடைவெளி வேண்டும். நெரிசலான இடங்களை தவிருங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். நமது கிரகத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Tags :
Next Story