மொத்த பாதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 தமிழகத்தில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா


மொத்த பாதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 தமிழகத்தில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Sept 2020 5:15 AM IST (Updated: 19 Sept 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆனது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய(வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,293 ஆண்கள், 2,194 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 5,488 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 127 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 593 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், கோவையில் 543 பேரும், சேலத்தில் 288 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 31 பேரும், பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 61 லட்சத்து 7 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 939 ஆண்களும், 2 லட்சத்து 10 ஆயிரத்து 939 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 30 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 22 ஆயிரத்து 448 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 69 ஆயிரத்து 11 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

67 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 33 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 16 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரி, கடலூர், கோவை, செங்கல்பட்டில் தலா 4 பேரும், ஈரோடு, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், விருதுநகர், வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ராணிப்பேட்டையில் தலா இருவரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, தேனி, திருவாரூர், நெல்லை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 685 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

5 ஆயிரத்து 525 பேர்‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 525 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 963 பேரும், திருவள்ளூரில் 350 பேரும், செங்கல்பட்டில் 346 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 506 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 909 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 237 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 அரசு நிறுவனங்கள் மற்றும் 109 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 175 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story