அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை


அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை
x
தினத்தந்தி 19 Sept 2020 3:41 AM IST (Updated: 19 Sept 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் சீன செயலிகளான டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடைவிதிக்கப்படுவதாக அந்த நாட்டின் வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு கருதி சீன செயலிகளான டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடைவிதிக்கப்படுவதாக அந்த நாட்டின் வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பற்றிய உத்தரவை வர்த்தக செயலாளர் வில்பர் ராஸ் நேற்று பிறப்பித்தார்.

“அமெரிக்க குடிமக்களிடம் இருந்து இந்த செயலிகள் மூலமாக அந்தரங்க தகவல்கள் சேகரிக்கப்படுவதால் தேச பாதுகாப்பு நலன்கருதி டிக்டாக், வீசாட் போன்ற செயலிகள் தடை செய்யப்படுவதாக” அவர் அறிவித்தார். அமெரிக்காவில் 10 கோடி பேர் டிக்டாக் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story