மூலிகை செடிகளை வளர்த்து கிராம மக்களின் வருவாயை பெருக்கும் திட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு


மூலிகை செடிகளை வளர்த்து கிராம மக்களின் வருவாயை பெருக்கும் திட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sept 2020 1:25 AM IST (Updated: 20 Sept 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியத்தின் 9-வது கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியத்தின் 9-வது கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, தேசிய உயிரிப்பல்வகைமை ஆணையத்தின் தலைமை முனைவர் வி.பி.மாத்தூர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் எஸ்.யுவராஜ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய செயலாளர் அசோப் உப்ரேடி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவல் முனைவர் ஜெயந்தி முரளி, வாரிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுக்கள் மூலம் மூலிகை செடிகளை உற்பத்தி செய்து அவற்றின் மூலம் கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்குவதற்கான திட்டங்கள் குறித்து வாரிய கூட்டத்தில் பேசப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களின் வருவாயை பெருக்குவதற்கும், கொரோனா காலத்தில் மூலிகை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மூலிகை வளர்ப்பு திட்டங்களுக்கு பெரிதும் உதவும் முயற்சிகளை தமிழக அரசு மூலம் தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம் முனைந்து எடுக்கும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல தேசிய உயிரிப்பல்வகைமை ஆணையத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளவும் தீர்மானிக் கப்பட்டது.

Next Story