வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு குறித்து கருத்தொற்றுமை தமிழக எம்.பி.க்கு, மந்திரி பதில்
நாடாளுமன்றத்தில், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
சென்னை,
நாடாளுமன்றத்தில், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர், வங்கி சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு குறித்து ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய வங்கியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.
அதுபோல 5 நாள் வார வேலையை வங்கிகளில் அமலாக்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மந்திரி, “தற்போது 2-வது, 4-வது சனிக்கிழமைகளை முழு விடுமுறை நாட்களாக அரசு அறிவித்துள்ளது. அதை மாற்றும் யோசனை ஏதும் அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை” என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story