திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவத்தில் 2 பேர் கைது


திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2020 12:18 PM IST (Updated: 21 Sept 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர்,

தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நேரில்  சந்தித்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்ததோடு, போராட்டத்திலும் பங்கேற்றார். இந்த  நிலையில் அவரது சொந்த ஊரான தண்டபத்திலுள்ள வீட்டு முன்பு நின்றிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவத்தில் ஜின்னா, செல்வநாயகம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.

Next Story