மாநில செய்திகள்

திமுகவை கண்டித்து, சென்னையில் நாளை தமிழக பாஜக சார்பில் போராட்டம் + "||" + Tamil Nadu BJP protest in Chennai tomorrow

திமுகவை கண்டித்து, சென்னையில் நாளை தமிழக பாஜக சார்பில் போராட்டம்

திமுகவை கண்டித்து, சென்னையில் நாளை தமிழக பாஜக சார்பில் போராட்டம்
திமுகவை கண்டித்து சென்னையில் நாளை தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. அதனால் மோடி பிறந்தநாள் விழாக்களில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலந்தூரில் சுவர் விளம்பரம் செய்த பாஜகவினரை திமுக வட்ட செயலாளர் நடராஜ் மிரட்டியுள்ளார். 3 பெண்கள் காயப்பட்டுள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியிலும் போஸ்டர்களை திமுகவினர் கிழித்திருக்கிறார்கள்.


பிரதமர் மோடியின் போஸ்டரை பார்த்து அவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களின் அராஜகம் எங்கள் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த அராஜகத்தை திமுக நிறுத்த வேண்டும். இதை கண்டித்து நாளை காலை 11 மணிக்கு பாஜகவின் சார்பில் சென்னையில் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.