முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றார்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றார்
x
தினத்தந்தி 22 Sept 2020 12:39 AM IST (Updated: 22 Sept 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

ஆலந்தூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார்.

முன்னதாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 5 மாதங்கள் கழித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் பயணம் செய்வதால் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கே.பி.கந்தன், சோமசுந்தரம், பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட அ.தி.மு.க.வினர் விமானம் நிலையம் செல்லும் வழி நெடுகிலும் நின்று முதல்-அமைச்சரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story