அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் வக்கீல் எஸ்.சூர்யமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. கட்சியின் சட்ட திட்டத்தின்படி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால், இதுவரை தேர்தல் நடத்தாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருகிறார்கள்.
கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரட்டை தலைமை இருப்பதை பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பவில்லை.
இதன் விளைவாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இருவரது பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு அடுத்த முதல்-அமைச்சர் என்று கோஷமிட்டுள்ளனர். கட்சியில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தலை நடத்த முடியும்.
எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல் கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமித்தது சரியானது அல்ல.
எனவே, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும்.
கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story