5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு தற்போது தலைமைச் செயலாளர்களாக நிலை உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த 1990-ம் ஆண்டு தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு தற்போது தலைமைச் செயலாளர்களாக நிலை உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுவதாகவும், தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் (டான்சி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விபு நய்யார், வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, முதல்-அமைச்சரின் செயலாளர்-1 எம்.சாய்குமார், நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நில வரி ஆணையர் பி.சிவசங்கரன், போக்குவரத்து ஆணையர் டி.எஸ்.ஜவஹர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story