பெட்ரோல், டீசல் விலை குறைவு


பெட்ரோல், டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 22 Sep 2020 2:53 AM GMT (Updated: 22 Sep 2020 2:53 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.  84.21--ஆகவும் டீசல் விலை ரூ. 76.85 ரூபாய்க்கும் விற்பனையானது.  பெட்ரோல் இன்று லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து, 84.14 ரூபாய் எனவும் டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


Next Story