ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை தமிழகத்துக்கு விரைந்து வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல்
2017-18-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி நிலுவைத் தொகையான ரூ.4,321 கோடியை தமிழகத்துக்கு விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
சென்னை,
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2017-2018-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஐ.ஜி.எஸ்.டி.) நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். வணிகவரி ஆணையர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2017-2018-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவைத் தொகை, மத்திய அரசால் மாநிலங்களுக்கு இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத் தொகையில் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைந்து வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, 2017-2018-ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொகையை பகிர்ந்தளிப்பது தொடர்பான பரிந்துரை வழங்க அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 18-ந்தேதியன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இக்குழுவின் கூட்டம் பீகார் துணை முதல்-மந்திரி சுசில்குமார் மோடி தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைந்து வழங்கிட வேண்டும் என கோரினார். மேலும், 2017-2018-ம் ஆண்டிற்கு மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையாக உள்ள ஐ.ஜி.எஸ்.டி. தொகையை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து 2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு சேரவேண்டிய ரூ.4,321 கோடி தொகையை அளித்திட வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இக்குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் விவாதித்து, தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story