திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வினியோகத்தில் எந்த தடையும் இல்லை - டீன் விளக்கம்


திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வினியோகத்தில் எந்த தடையும் இல்லை - டீன் விளக்கம்
x
தினத்தந்தி 23 Sept 2020 8:11 AM IST (Updated: 23 Sept 2020 8:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வினியோகத்தில் எந்த தடையும் இல்லை என்று டீன் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூர், 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 204 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 147 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டவை ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கு 20 பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலமாக குழிதோண்டும் பணியின்போது பூமிக்கு அடியில் சென்ற பிரதான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் மின்தடை ஏற்பட்டது. மின்விசிறிகள், மின்விளக்குகள் உள்ளிட்டவை செயல்படவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் வள்ளி கூறும்போது, “ஆக்சிஜன் இணைப்புக்கும், மின்சார தடைக்கும் சம்பந்தமில்லை. மின்தடை ஏற்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தொடர்ந்து வழங்கப்பட்டது. இதற்காக பிரத்யேக வடிவமைப்புடன் ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இன்வெட்டர் இணைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் செல்வதில் எந்த தடையும் ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார்.

Next Story