தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sept 2020 10:24 PM IST (Updated: 23 Sept 2020 10:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5,325 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,282 பேர். பெண்கள் 2,043 பேர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 பேர். பெண்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 22 ஆயிரத்து 913 பேர். 13-60 வயதுடையவர்கள்4 லட்சத்து 63 ஆயிரத்து 126 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 ஆயிரத்து 960 பேர்.

 கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 979. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 67 லட்சத்து 25 ஆயிரத்து 37.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 191. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 19 ஆயிரத்து 891.

 தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் 27 பேர், அரசு மருத்துவமனைகளில் 36 பேர் என, 63 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9,010 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 4 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 59 பேர்.

இன்று ஒரே நாளில் 5,363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2,740 ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை 46 ஆயிரத்து 249 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 111 என, 177 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னையில் அதிகபட்சமாக 980 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,118 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. 9,868 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்

இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளது.

Next Story