தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 மாவட்டங்களில் உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 83 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,282 ஆண்கள், 2,043 பெண்கள் என மொத்தம் 5,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 6 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 72 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 640 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 980 பேரும், கோவையில் 587 பேரும், சேலத்தில் 298 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும், திருப்பூரில் 247 பேரும், திருவள்ளூரில் 218 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 65 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 ஆண்களும், 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 913 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 960 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 63 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 9 பேரும், சென்னையில் 8 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கடலூர், தஞ்சாவூரில் தலா 5 பேரும், கோவை, திருப்பூரில் தலா 4 பேரும், ராமநாதபுரத்தில் 3 பேரும், நீலகிரி, தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, தென்காசி, திருப்பத்தூர், நெல்லை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 23 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 9,010 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 363 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,118 பேரும், கோவையில் 512 பேரும், கடலூரில் 312 பேரும், திருவள்ளூரில் 286 பேரும், சேலத்தில் 212 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 249 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 928 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 250 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக ஒரு தனியார் ஆய்வகத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 66 அரசு ஆய்வகங்கள் மற்றும் 111 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 177 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story